பெண் ஜிம் உரிமையாளர் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்-மனைவி.. வேலூரில் பயங்கரம்.!
பணத்துக்காக தம்பதி ஜிம் பெண் பயிற்சியாளருக்கு செய்த கொடுமை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நண்பரோ - உறவினரோ யாரையும் நம்பக்கூடாது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
ஜிம் உரிமையாளர்:
Couple Accused of Filming Sexual Assault: வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரியில், 35 வயதுடைய பெண்மணி ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஜிம்மில் ஏராளமானவர்கள் உடற்பயிற்சி செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அங்குள்ள அன்னை தெரசா தெருவில் வசித்து வரும் எப்சியா (வயது 33) என்பவர் உடற்பயிற்சிக்காக சேர்ந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!
சோகத்தால் அனுதாபம் தேடினார்:
இவர் வேலூரில் செயல்படும் பிரபலமான தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளராக இருக்கிறார். உடற்பயிற்சி மையத்திற்கும் வந்து சென்ற நிலையில், ஜிம் உரிமையாளரிடம் நெருங்கி பழகி இருக்கிறார். மேலும், தனது கணவருக்கு சரியான வருமானம் இல்லை என்றும், எதாவது உதவி செய்ய வேண்டும் எனவும் கூறி சோகக்கதையை கூறி மனதை மாற்றி இருக்கிறார்.

திட்டம்:
இதனிடையே, எப்சியா தனது மகனுக்கு பிறந்தநாள் விழாவில் பெண் ஜிம் உரிமையாளரை வீட்டுக்கு அழைத்துள்ளார். இதன்பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி பெண் வீட்டுக்குச் சென்ற நிலையில், எப்சியா, அவரின் கணவர் மணிவண்ணன் (வயது 38) ஆகியோர் சேர்ந்து உடற்பயிற்சி மைய உரிமையாளருக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.
பலாத்காரம்:
இந்த ஜூஸை குடித்த சிறிது நேரத்திலேயே பெண் மயக்கம் அடைந்த நிலையில், எப்சியாவின் கணவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை எப்சியா வீடியோ எடுத்துள்ளார். மேலும், பெண்ணை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களையும் எடுத்து வைத்துள்ளனர். இந்த வீடியோ & போட்டோவை காண்பித்து அவ்வப்போது பெண் உரிமையாளரிடம் இருந்து பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர்.

கைது:
இவ்வாறாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் கொடுத்து இருக்கிறார். ஒருகட்டத்தில் பணம் இல்லை என்று தெரிவித்தபோது, வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இதனால் பெண் ஜிம் உரிமையாளர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் அதிகாரிகள் தம்பதியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நண்பரை அழைத்து வந்து நடந்த கொடுமை.. கோவையில் ஷாக்.!