திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நண்பரை அழைத்து வந்து நடந்த கொடுமை.. கோவையில் ஷாக்.!



in Coimbatore 33 Year Old Widow Girl Gang Raped

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை திட்டமிட்டு மனதை மாற்றி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சோகம் கோவையில் அரங்கேறி இருக்கிறது.

தம்பதிகள் & பிரிவு:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் வீடியோ எடிட்டராக இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு 33 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து தம்பதிகளாக வசித்து வந்த நிலையில், 2023ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 வயதுடைய ஆண் குழந்தையும் இருக்கிறது. பெண் சூலூரில் வாடகைக்கு அலுவலகம் எடுத்து வீடியோ எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.  

இதையும் படிங்க: தண்ணீரில் மயக்க மருந்து.. காதலிக்கு காதலன் செய்த துரோகம்.. பரபரப்பு புகார்.!

நயவஞ்சக பழக்கம்:

இதனிடையே, பெண்ணின் பக்கத்து அறையில் தங்கியிருந்த அந்தோணி மரிய ராபின், பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் பெண்ணின் நிலையை தெரிந்துகொண்டவர் ஆசை வார்த்தை கூறி பெண்ணை தன்வசப்படுத்தி இருக்கிறார். இதனால் கடந்த ஓராண்டாக பெண்ணும் - ராபினும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. இதனால் சில நாட்களாகவே இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

Coimbatore

கூட்டுப்பாலியல் வன்கொடுமை:

சம்பவத்தன்று அந்தோணி ராபின், தனது நண்பர் கிரீஸ் சாமுவேல் குமார் என்பவருடன் பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு பெண்ணை சமாதானம் செய்ய பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. பின் பெண்ணுக்கு குடிக்க ஜூஸ் கொடுக்கவே, அதனை குடித்த பெண் மயங்கி இருக்கிறார். மயக்கத்தில் இருந்த பெண்ணை இருவரும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்தபின் பெண்ணிடம் கூட்டுப்பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்து வைத்துள்ளதாக இருவரும் மிரட்டி இருக்கின்றனர். 

விசாரணை:

மேலும், திருமணம் தொடர்பாக அந்தோணியை வற்புறுத்தினால் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகும் என மிரட்டி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து பெண்மணி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் திண்டுக்கல்லைச் சேர்ந்த அந்தோணி மரிய ராபின் (வயது 28) க்கு வலைவீசி இருக்கின்றனர். திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் சாமுவேல் குமார் (வயது 30) கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!