தண்ணீரில் மயக்க மருந்து.. காதலிக்கு காதலன் செய்த துரோகம்.. பரபரப்பு புகார்.!



in Chennai 28 Year Old Girl Raped by Love Boy 

தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து காதலியை வன்கொடுமை செய்த காதலன், திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் நட்பு:

சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய பெண்மணி கலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2024ம் ஆண்டு முதல் 2025 வரையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், தாம்பரத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த கோகுல் என்ற நபருடன் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளார். கோகுல் பகுதி நேர இயக்குனர் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

மயக்க மருந்து:

இதனிடையே, இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், கோகுல் கலாதியிடம் திருமணம் செய்துகொள்வதாக அவரின் குடும்பத்தாருடன் அறிமுகம் செய்துள்ளார். கலாவதி 2 ஆண்டுகள் அவகாசம் கேட்கவே, அதற்கு ஒப்புக்கொண்ட கோகுல் கடந்த 2026 மார்ச் 31ம் தேதி காதலியை திருமணம் குறித்து பேசவேண்டும் என கிண்டியில் இருக்கும் அறைக்கு அழைத்துள்ளார். அங்கு கலாவதிக்கு தண்ணீர் குடிக்க கொடுத்த நிலையில், அதனை குடித்த பெண்மணி மயங்கி இருக்கிறார். 

chennai

பாலியல் வன்கொடுமை:

அரைமயக்கத்தில் தந்தைக்கு தொடர்புகொள்ள முயன்ற நிலையில், கோகுல் செல்போனை வாங்கி இருக்கிறார். பின் கலாவதியுடன் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நிலையில், மயக்கம் தெளிந்து அவர் கேட்டபோது நான்தானே திருமணம் செய்யப்போகிறேன் என கூறி இருக்கிறார். பின் கலாவதியுடன் கோகுல் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதுகுறித்து கோகுலின் குடும்பத்தாரிடம் கலாவதி கேட்டபோது, அவர்கள் கோகுலுக்கு வேறொரு பெண் பார்த்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.

கோகுலுடன் பெண்மணி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து மிரட்டியும் இருக்கின்றனர். இதனால் தற்போது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கலாவதி புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் மூழ்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. காதலிப்பதாக நடித்து 3 பேரால் நடந்த கொடுமை.. கண்ணீர் சோகம்.. சென்னையில் ஷாக்.!