BREAKING : 84 வயதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்! மறக்க முடியாத படைப்பாளர் இன்று மறைந்தார்.... கண்ணீரில் ரசிகர்கள்..!!!



director-bharathiraja-passes-away-chennai

தமிழ் திரையுலகில் கிராமத்து கதைகளின் மூலம் தனித்துவமான பாதையை உருவாக்கிய இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்

சமீப மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, மருத்துவர்களின் கண்காணிப்பில் இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார். தகவலின்படி, வயது மூப்பு காரணமான உடல்நல பாதிப்புகளுடன் நுரையீரல் தொற்றும் அவரை கடுமையாக பாதித்திருந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவ பராமரிப்பில் இருந்து வந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

bharathiraja

மகன் மறைவால் ஏற்பட்ட மன உளைச்சல்

கடந்த ஆண்டு அவரது மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா திடீரென உயிரிழந்தது குடும்பத்தினரையும், நெருங்கியவர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. அந்த இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல்நிலையும் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: BREAKING: இன்று காலை நல்லகண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல்! மீண்டும் உடல்நிலை பின்னடைவால் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படைப்பாளர்

பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'முதல் மரியாதை' உள்ளிட்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படைப்புகளாக பார்க்கப்படுகின்றன. கிராமத்து வாழ்க்கையை இயல்பாக திரையில் கொண்டு வந்த தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளர்களில் ஒருவராக அவர் மதிக்கப்பட்டார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நடிகை மனோரமாவின் ஒரே மகன் பூபதி காலமானார்! தமிழ் திரையுலகத்தில் பெரும் சோகம்....