இயக்குநர் பாரதி ராஜாவின் சர்ச்சைகள்.. பயில்வான் ரங்கநாதனின் முழு வீடியோ.!



Bayilvan Ranganathan Interview on Dark Secret of Bharathiraja

உள்ளமும், உடலும் கெட்டுப்போனதால் பாரதிராஜா மறைந்துவிட்டார் என பயில்வான் பேசி இருக்கிறார்.

காதல், சஸ்பென்ஸ், வித்தியாசம், சாதி-சமய பேதங்களை வெளிப்படுத்தும் பல்வேறு படங்களை கொடுத்த பாரதிராஜா, இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் மறைந்த நிலையில், அந்த சோகத்தில் இருந்து வந்த பாரதிராஜா மிகப்பெரிய வருத்தத்தில் இருந்து வந்தார். இதனிடையே, அவர் உடல்நலக்குறைவால் காலமானது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது.

cinema news

உடல்நலக்கேடு, உள்ளம் நலக்கேடு:

மகன் மறைந்த பின்னர் மலேஷியாவில் மகளுடன் 6 மாதம் வசித்து வந்த பாரதிராஜா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பணியாற்றிய நினைவுடன் தவித்து வந்துள்ளார். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அடையாளம் பதித்த பாரதிராஜா, நிம்மதியின்மை காரணமாக தவித்து வந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார். சினிமாவில் இருக்கும் வெற்றிபெற்ற பலருக்கும் இது விதி என அவர் குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் இருப்பவர்கள் புகை, மதுவை அதிகம் எடுத்துக்கொள்வதால் வாழ்க்கையை அழித்து தவிப்பதாகவும் வீடியோவில் கூறி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!

பாரதிராஜாவின் பல கருப்பு பக்கங்கள் தனக்கு தெரியும் என்றாலும், அது நடந்து முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் என பேசிய பயில்வான் ரங்கநாதன், புத்திர சோகத்தை அனுபவித்த காரணத்தால் பாரதிராஜா நடைபிணமானதாக தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து தூக்கிய கார்.. கர்ப்பிணி பெண் துடிதுடிக்க பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!