எவ்வுளவு வலிச்சிருக்கும் அந்த பிஞ்சுக்கு.. மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த குழந்தை நடுவானில் பலி.. கண்ணீர் சோகம்.!



Heartbreaking Tragedy: 58-Day-Old Baby Dies Mid-Air While Traveling to Chennai for Treatment

பிறந்து 2 மாதமேயான பச்சிளம் குழந்தை விமான பயணத்தின்போது உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

இதயத்தில் ஓட்டை:

Kenya to Chennai Flight Baby Death: கென்யா நாட்டில் வசித்து வரும் தம்பதி மூவாய். இவரின் மனைவி முத்தொனி. தம்பதிகளுக்கு கடந்த 58 நாட்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு எலினா என பெயர் சூட்டி இருக்கின்றனர். குழந்தை பிறந்ததில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததால், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது, குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மரணம்.. கோவை மருத்துவமனையில் சோகம்.! 

துபாய் - சென்னை விமானம்:

இதனையடுத்து, கென்ய மருத்துவர்கள் குழந்தையை சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி இருக்கின்றனர். கென்யாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லாத நிலையில், கென்யாவில் இருந்து துபாய் வந்த தம்பதி, அங்கிருந்து சனிக்கிழமை காலை துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தடைந்தது. 

chennai

23 நிமிடங்கள் முன்பே இறங்கிய விமானம்:

விமானம் சென்னையை நெருங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், குழந்தைக்கு திடீரென உடல்நலம் மோசமாகியுள்ளது. இதனையடுத்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சென்னை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குட் காவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரத்தை தெரியப்படுத்தவே, வழக்கமாக காலை 08:15 மணியளவில் தரையிறங்க வேண்டிய விமானம், 23 நிமிடங்கள் முன்னதாக 07:52 க்கு அவசர தரையிறக்க அனுமதியுடன் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிஞ்சு மரணம்:

மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்தில் ஏறி குழந்தையை பரிசோதனை செய்த நிலையில், அவர்கள் மரணத்தை உறுதி செய்தனர். இதனால் கென்ய தம்பதி கதறியழுத நிலையில், அவர்களுடன் பயணித்த பிற பயணிகளும் தம்பதிகளின் கண்ணீரில் சோகத்தில் ஆழ்ந்தனர். பின் சென்னை விமான நிலைய காவல்துறையினர் வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: வெளிநாட்டில் கணவன் வேலை.. ஆண் நண்பரால் பெண்ணுக்கு பிரசவ வலி.. நடந்த வினோத சம்பவம்.!