அரசுப்பேருந்தில் பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஓட்டுனரின் சாமர்த்திய செயல்.. குவியும் பாராட்டுக்கள்.!



Woman Suffers Medical Emergency on TN Government Bus, Driver's Quick Action Saves Her Life

திண்டிவனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பேருந்து பயணத்தில் உடல்நலக்குறைவு ஏற்படவே, அரசுப்பேருந்து ஓட்டுனரின் சாமர்த்திய செயலால் பெண் உயிர்பிழைத்தார்.

பேருந்து பயணம்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 30). நேற்று மாலை நேரத்தில், திண்டிவனத்தில் இருந்து பெற்றோருடன் புதுச்சேரி நோக்கி பயணம் செய்தார். இவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தில் பயணம் செய்த நிலையில், பேருந்து புதுச்சேரி டோல்கேட் அருகே சென்றுள்ளது.

இதையும் படிங்க: Madurai News: அலங்காநல்லூரில் அட்டூழியம் காட்டிய தெருநாய்கள்.. 15 பேர் அலறி மருத்துவமனைக்கு ஓட்டம்.. செவிலியர்கள் சொன்ன ஷாக் தகவல்.!

பெண்ணுக்கு வலிப்பு:

அப்போது, ஐஸ்வர்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இருக்கு போராடவே, பேருந்தில் இருந்தவர்கள் முதலுதவி அளித்துள்ளனர். எனினும் அது பலனளிக்காத நிலையில், பேருந்தின் ஓட்டுநர் & நடத்துனர் சாமர்த்தியமாக பேருந்தை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயிலுக்கு அருகே பேருந்து சென்றதும், அங்கிருந்தவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு உடனடியாக பெண்ணை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்தனர்.

மருத்துவர்கள் பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளித்த நிலையில், பெண் எந்த விதமான ஆபத்தும் இன்றி தப்பினார். அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்தினரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 

 
 

 

 

இதையும் படிங்க: புஷ்வானம், ஹைப், பிளாப்.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு.!