தாயின் கண்முன் காதலருடன் புறப்பட்ட மகள்.. மனம் பொறுக்காமல் அம்மா எடுத்த விபரீத முடிவு.!
தனது பேச்சை கேட்காமல் காதலனே வேண்டும் என பெண் புறப்பட்டதால் தாய் விபரீத முடிவு எடுத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, ஆனந்தபாளையம் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவரின் மனைவி கோசலை (வயது 45). தம்பதிகள் தேங்காய் வியாபாரிகள் ஆவார்கள். இவர்களுக்கு 23 வயதுடைய திவ்யா என்ற மகள் இருக்கிறார்.
காதல்:
இதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் கதிர்வேல் (வயது 27). இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இருவரும் திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளனர். சம்பவத்தன்று இரவில் திவ்யாவை அழைத்துச்செல்ல கதிர்வேல் வந்துள்ளார்.
இதையும் படிங்க: குட்டி குட்டி ஆடையுடன் ரீல்ஸ்.. மாமனார்-மாமியார் தாக்கிய மருமகள்.. மனமுடைந்து எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!

தற்கொலை:
அச்சமயம் காதலருடன் புறப்பட திவ்யா வீட்டில் இருந்து வெளியேற, இதனைகவனித்த கோசலை மகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனை மீறியும் திவ்யா காதலருடன் சென்றுவிட, மனமுடைந்த கொலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரியாணி எலும்புத்துண்டு தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் மரணம்.. ஈரோட்டில் சோகம்.!