பிரியாணி எலும்புத்துண்டு தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் மரணம்.. ஈரோட்டில் சோகம்.!
7 வயது சிறுவனின் உயிரை பிரியாணியில் இருந்த சிக்கன் துண்டு பறித்துக்கொண்ட சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சிறுவன்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி, அம்மன் கோயில், தலையநல்லூர் காலனியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 37). இவரின் மனைவி பரிமளா தேவி (வயது 34). தம்பதிகளுக்கு ரோகித் என்ற 7 வயது மகனும், கைக்குழந்தையாக தர்ஷித் என்ற மகனும் இருக்கின்றனர். வாய்பேச இயலாத சிறுவன் ரோகித் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: குட்டி குட்டி ஆடையுடன் ரீல்ஸ்.. மாமனார்-மாமியார் தாக்கிய மருமகள்.. மனமுடைந்து எடுத்த முடிவால் கண்ணீர் சோகம்.!
பிரியாணி:
இதனிடையே, பரிமளா சம்பவத்தன்று பிரியாணி சமைத்துவிட்டு, அதனை பாத்திரத்தில் வைத்துள்ளார். பின் கைக்குழந்தை தர்ஷித்தை கவனித்து வந்துள்ளார். இதனிடையே, பிரியாணி மீதான ஆவலால் சிறுவன் ரோகித் அதனை எடுத்து தானாக உட்கொண்டதாக தெரியவருகிறது. அப்போது, பிரியாணியில் இருந்த எலும்புத்துண்டு எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கி இருக்கிறது.

பரிதாப பலி:
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட சிறுவன் பரிதவிக்கவே, பாட்டி தொண்டையில் கையை விட்டு எலும்பை எடுத்துள்ளார். பின் சிறுவன் மயக்கமடைந்து இருக்கிறார். உடனடியாக உறவினர்கள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிறுவனின் மரணம் அங்கு உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!