+2 மாணவி வன்கொடுமை.. தாயும், மகனும் அரங்கேற்றிய கொடூரம்..!
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் தாய்மாமன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் உள்ள கிராமத்தில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மாணவிகளிடம் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!
தாய்மாமன் மிரட்டல்:
அப்போது, அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயது சிறுமி, தாய்மாமா தன்னை காதலிப்பதாக தொல்லை கொடுப்பதாகவும், 4 மாதங்களுக்கு முன்பு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து வெளியே கூறினால் சமூக வலைத்தளத்தில் தவறான தகவலை பரப்புவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
போக்ஸோவில் கைது:
இதனையடுத்து, அதிகாரிகள் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வன் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தமிழின் தாய் விஜயாவும் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!