சற்று முன்... MLA பதவியை ராஜினாமா செய்ய முடியாது...! அவசர முடிவு எடுக்க வேண்டாம்... வைகோவின் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்.!!!



mdmk-mla-rajendran-refuses-to-resign-kadayanallur

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியுள்ள நிலையில், கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனால் கட்சிக்குள் புதிய கருத்து வேறுபாடுகள் உருவாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தன்னை, கட்சி, சாதி, மதம் கடந்து கடையநல்லூர் தொகுதி மக்கள் தேர்வு செய்து அனுப்பியுள்ளனர் என்றும், அவர்களின் நம்பிக்கையை மதித்து பதவியை விட்டு விலக முடியாது என்றும் இராசேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடமும் நேரடியாக தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும், இன்னும் ஆறு மாதங்கள் காத்திருந்து நிலைமையை மதிப்பீடு செய்து முடிவு செய்யலாம் என தான் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அந்த கருத்தை வைகோ ஏற்கவில்லை என்றும் அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வைகோ உத்தரவுக்கு எதிர்ப்பு

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அந்த உத்தரவை ஏற்க எம்.எல்.ஏ.க்கள் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதிமுகவில் அதிகரிக்கும் உட்கட்சிப் பரபரப்பு

அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தற்போதைக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் மனநிலையிலேயே இராசேந்திரன் உள்ளிட்டோர் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பொதுக்குழு கூட்டத்தையும் சிலர் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைகோவின் முடிவும், எம்.எல்.ஏ.க்களின் மாறுபட்ட நிலைப்பாடும் மதிமுகவிற்குள் புதிய உட்கட்சிப் பிரச்சினையை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: BREAKING: விசிக கட்சி 100% தேர்தல் களத்தில் போட்டியிடாது...! காலையிலேயே திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு.!!!