17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. உடல்நலம் குன்றிய நண்பரை பார்க்கச் சென்றபோது பயங்கரம்.! சென்னையில் ஷாக்.!
சிறுமியை மதுபோதை கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரம் சென்னையில் நடந்துள்ளது.
சிறுமி வன்கொடுமை:
17 Year Old Girl Gang Raped: சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். சிறுமியை காணாது பெற்றோர் தேடி அலைந்த நிஜ்லையில், நேற்று சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமி தன்னை போதையில் இருந்த ஆண் நண்பர்கள் 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்ணீர்மல்க நடந்ததை விவரித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம்.. வெளியான பரபரப்பு பின்னணி.!
காவல்துறை விசாரணை:
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடந்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, 12ம் வகுப்பில் தோல்வியடைந்த சிறுமி மறுதேர்வுக்கு தயாராகி இருந்துள்ளார். இதனிடையே, உடல்நிலை சரியில்லாத நண்பர் ஒருவரை நேரில் பார்க்க குன்றத்தூருக்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து புறப்பட்டபோது, சிறுமியின் நண்பர் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக தெரிவித்துள்ளார்.

கூட்டுப்பாலியல் பலாத்காரம்:
இதனால் சிறுமியும் நண்பரை நம்பிச் சென்ற நிலையில், மாங்காடு - கெருகம்பாக்கம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு செல்ல வேண்டும் என மாணவி கூறவே, நண்பர்கள் வருகிறார்கள், அவர்களை சந்தித்து செல்லலாம் என கூறி இருக்கிறார். சிறிது நேரத்தில் வந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், மாணவியை மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து, அதிகாரிகள் முகமது ஆஷிக் (வயது 22) என்பவரை கைது செய்தனர். பிற அனைவருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!