ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன்... டீசர் தேதி அறிவிப்பு.!
ஜீவா நடிப்பில் உருவாகும் படத்தின் டீசர் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒருகல் ஒருகன்னடி, ஆள் இன் ஆள் அழகுராஜா, வாசுவும் சரவணணமும் ஒண்ணா படிச்சவங்க, கிக், மிஸ்டர் லோக்கல், வணக்கம் டா மாப்ள, பிரதர் ஆகிய படங்களை இயக்கி வழங்கியவர் ராஜேஷ். இவரின் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜியோ என்ற ஜாலியா இருந்த ஒருத்தன்.
யுவன்-ஜீவா-ராஜேஷ் கூட்டணி இணைவு:
இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர், ஸ்ரீனிவாஸ் ரித்திகா, ராஜ் அய்யப்பா உட்பட பலரும் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். சிவா மனசுல சக்தி படத்துக்குப்பின் ஜீவா - ராஜேஷ் கூட்டணியில் இப்படம் உருவாகிறது. யுவனும் இத்துடன் இணைகிறார்.
இதையும் படிங்க: Madurai News: அலங்காநல்லூரில் அட்டூழியம் காட்டிய தெருநாய்கள்.. 15 பேர் அலறி மருத்துவமனைக்கு ஓட்டம்.. செவிலியர்கள் சொன்ன ஷாக் தகவல்.!
இதனால் இந்த படம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் டீசர் காட்சிகள் வரும் ஜூன் 21 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Lets start the Dum Dum Dum vibes 💥
— Jiiva (@JiivaOfficial) June 19, 2026
Presenting the vibrant second look of #JolliyaIrunthaOruthan - Teaser from 21st June!
Produced by @malikstreams #datoabdulmalik
Co Produced by @Razikahamed16
Starring @jiivaofficial
A @rajeshmdirector Film
An @thisisysr Musical@i__ivana… pic.twitter.com/681kuJMtw0
இதையும் படிங்க: புஷ்வானம், ஹைப், பிளாப்.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு.!