அக்கா தங்கச்சி மூணு பேருக்கும் ஒரே புருஷன்! கடைசி பொண்டாட்டியால் புது மாப்பிளைக்கு வந்த சிக்கல்! அது மட்டும் உண்மையுன்னா... அவ்வளவுதான்... அதிர்ச்சி சம்பவம்!!!



up-instagram-sisters-marriage-minor-probe

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே இளைஞரை மூன்று இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுவென்சர் சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இளைய சகோதரி மைனர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைய சகோதரியின் வயது குறித்து தீவிர விசாரணை

அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் பகுதியில் உள்ள தோரியா கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளில் இளையவரான சவி சந்தோஷ் வயதுக்கு வராதவர் என்ற தகவல் குழந்தைகள் நலக்குழுவுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹசன்பூர் போலீசார் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆசை வார்த்தை சொல்லி பிளஸ் 2 மாணவியை சீரழித்த கட்டட மேஸ்திரி! மருத்துவமனையில் பெற்றோர்க்கு காத்திருந்த அதிர்ச்சி...!!!

திருமண முடிவுக்கு சகோதரிகள் விளக்கம்

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில், இந்த முடிவை மூன்று சகோதரிகளும் அவர்களது கணவரான விகாஸும் விளக்கியுள்ளனர். தங்களது தந்தை வேறு திருமண ஏற்பாடுகளை செய்திருந்தாலும், மூவரும் பிரியாமல் ஒரே குடும்பமாக வாழ விரும்பியதால் இந்த முடிவை எடுத்ததாக மூத்த சகோதரி அல்கா தெரிவித்துள்ளார். முதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களை திருமணம் செய்ய முயன்றும் அது நடக்காததால், தங்களுடன் பணியாற்றிய கேமராமேன் விகாஸை திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறியுள்ளனர். மேலும், Instagram Influencers ஆக ஏற்கனவே லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருப்பதால், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த திருமணத்தை நாடகமாக நடத்தவில்லை என்றும் அவர்கள் மறுத்துள்ளனர்.

சட்ட நடவடிக்கைக்கு காத்திருக்கும் அதிகாரிகள்

இளைய சகோதரிக்கு கடந்த ஆண்டே 18 வயது நிறைவடைந்துவிட்டதாக அல்கா தெரிவித்துள்ளார். தோற்றத்தை வைத்து ஒருவரின் வயதை முடிவு செய்ய முடியாது என்றும், அரசு விரும்பினால் மருத்துவ பரிசோதனை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று பேரையும் பிரிக்காமல் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக விகாஸும் விளக்கம் அளித்துள்ளார். தற்போது போலீசாரின் விசாரணை அறிக்கையும், இளைய பெண்ணின் வயது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியான பிறகே அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: அங்கன்வாடி முட்டையை உடைத்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி! அதை பார்த்து அலறித் துடித்த கொடூரம்.....!!!