26 வயது மருமகளை கர்ப்பமாக்கிய 66 வயது மாமனார்.. கர்ப்பத்தால் அம்பலமான திடுக் உண்மை.. தமிழகத்தில் ஷாக்.!



in-tirupattur-26-year-old-widow-woman-raped-by-father-i

அரசு வேலை வாங்கித்தருகிறேன் எனக்கூறி சொந்த மருமகளிடம் மாமனார் அத்துமீறிய அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. இந்த துயரத்தில் பெண் கர்ப்பமானதால் அம்பலமான அதிர்ச்சி உண்மை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

இயற்கை எய்தினார்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையமுத்தூர், சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (வயது 66). இவருக்கு 1 மகன், 4 மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் மகன் சிங்காரவேலனுக்கு திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்காரவேலன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

இதையும் படிங்க: "அங்கிள் ப்ளீஸ் வேண்டாம்" அலறிய 6 ஆம் வகுப்பு சிறுமி.. அடங்காத பாக்யராஜுக்கு போக்ஸோ தண்டனை.! 

"அரசு வேலை வாங்கி தரேன்"

கணவர் இறந்த பின்னர் 3 குழந்தைகளுடன் பெண்மணி கணவர் வீட்டிலேயே மாமனாருடன் வசித்து வந்துள்ளார். மகன் இறந்த பின்னர் 26 வயதுடைய மருமகள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திய மாமனார், அவ்வப்போது மருமகளுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி இருக்கிறார். மேலும், இதனை பகடைக்காயாக பயன்படுத்தி அத்துமீறியதாகவும் தெரியவருகிறது.

Crime news

கர்ப்பம் அம்பலமானது:

இந்த பாலியல் அத்துமீறல் தொடர்ந்த நிலையில், ஒருகட்டத்தில் மருமகள் கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் மாமனார் ஆனந்த்ராஜ் அதிர்ச்சியடைந்த நிலையில், கர்ப்பத்துக்கு நான் தான் காரணம் என்பதை வெளியே சொல்லிவிடாதே என கூறி இருக்கிறார். இந்நிலையில், 26 வயது கைம்பெண்ணின் கர்ப்பம்  குறித்த விவகாரம் ஊராருக்கு தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி உண்மை:

இதுகுறித்து கேட்டபோது பெண் தன்னை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன பெண்ணின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி உண்மை அம்பலமானது. இதனையடுத்து ஆனந்தராஜின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

இதையும் படிங்க: 2 வயது கைக்குழந்தை பாலியல் வன்கொடுமை.. திமுக நிர்வாகி கைது.. பரபரக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!