சென்னை: கேரட் சாப்பிட்ட 2 வயது சிறுமி மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!



in-chennai-2-year-old-girl-died

கேரட் சாப்பிட்டதாக கூறப்படும் சிறுமி மரணம் அடைந்த சோகம் நடந்துள்ளது.

 

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவரின் 2 வயது குழந்தை லத்திகா. இவர் இன்று வீட்டில் இருந்தார். 

இதனிடையே, வீட்டில் இருந்த சிறுமி கேரட் சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அப்போது, குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. 

death

குழந்தை மரணம்

குழந்தை மூச்சுத்திணறலை எதிர்கொண்டு துடிக்கவே, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: தாயின் சடலத்துடன் சைக்கிளில் வலம்வந்த மகன்; கலங்கவைக்கும் துயரம்.!

தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டீ குடிக்க மூட்டிய நெருப்பால் விபரீதம்; குடிசை வீடு எரிந்து பெண் மரணம்.!