தாயின் சடலத்துடன் சைக்கிளில் வலம்வந்த மகன்; கலங்கவைக்கும் துயரம்.!



in-tirunelveli-a-son-with-his-mother-death-body-bicycle

திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றடைப்பு பகுதியில் வசித்து வருபவர் சிவகாமியம்மாள் (வயது 60). இவரின் மகன் பாலன் (வயது 38). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவ்வப்போது நினைவுடன் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, சிவகாமியம்மாள் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவை எய்தியிருந்த நிலையில், 15 கிமீ தொலைவில் இருக்கும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

death

தாய் உயிரிழந்ததால் சைக்கிளில் வைத்து தள்ளிச் சென்ற மகன்

அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி, ஜன.23 அன்று மாயமானார். இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே, தாய் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் மகன் பாலன், தாயின் உடலை சைக்கிளில் வைத்து தள்ளிச் சென்றார். 

இதையும் படிங்க: டீ குடிக்க மூட்டிய நெருப்பால் விபரீதம்; குடிசை வீடு எரிந்து பெண் மரணம்.!

இதனை நேரில் கண்டவர்கள் அவரிடம் விசாரித்து, பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பின் பாலனின் உறவினர்களை தொடர்புகொண்டு உடலை ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ஹெட்செட்டுக்காக உயிரைவிட்ட 19 வயது கல்லூரி மாணவர்.. இரயில் மோதி நடந்த சோகம்.!