மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
டீ குடிக்க மூட்டிய நெருப்பால் விபரீதம்; குடிசை வீடு எரிந்து பெண் மரணம்.!

அதிகாலை நேரத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் பரிதாபமாகி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பாளையம், எலந்தக்குட்டை, சின்னம்மாள் காடு, கட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி என்ற கஸ்தூரி (வயது 43). இவர் தனது கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார். தற்போது தனது தந்தையின் வீட்டருகே உள்ள குடிசையில் வசிக்கிறார்.
இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கஸ்தூரி டீ வைப்பதற்கு விறகு அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குடிசையில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்து பெண்ணால் வெளியேற இயலவில்லை.
இதையும் படிங்க: ஹெட்செட்டுக்காக உயிரைவிட்ட 19 வயது கல்லூரி மாணவர்.. இரயில் மோதி நடந்த சோகம்.!
பெண் பரிதாப பலி
அவரின் அலறல் சஹதம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து காப்பாற்ற முயன்றாலும், வீட்டில் இருந்த பொருட்களை எடுக்க முயன்ற பெண்மணி தீயில் சிக்கிக்கொண்டார். தகவல் அறிந்து வந்த வெப்படை தீயணைப்பு & மீட்புப்படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின் உடல் கருகிய நிலையில் சரஸ்வதியின் உடல் மீட்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செங்கல்பட்டு: தண்ணீர் வாளியில் தலைகுப்பற சடலமாக கிடந்த 1 வயது குழந்தை.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.!