நிறைமாத கர்ப்பிணி மனைவி..! நலம் விசாரித்த கணவன்..! அடுத்த நாள் பிணமாக கிடந்த அவலம்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!

மனைவியின் பிரசவ நேரத்தில் அவருடன் இருக்க முடியவில்லையே என்ற சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ராகினி என்கிற ரோஜா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் ஜூன் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து தனது கணவனுடன் வசித்துவந்த ரோஜா கற்பமாகியுள்ளார்.
தனியார் சாயப்பட்டறை நிறுவனத்தில் தினக்கூலியாக வேலைபார்த்துவரும் விக்னேஸ்வரன், தனது மனைவி கற்பமானநிலையில் அவரை சென்னையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரோஜா தனக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவம் நடந்துவிடும் என காஞ்சிபுரத்தில் உள்ள தனது கணவன் விக்னேஸ்வரன்னுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார்.
உன் பிரசவத்தின்போது நான் நிச்சயம் உன் கூட இருப்பேன் என விக்னேஸ்வரனும் தனது மனைவிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். ஆனால் தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு தீவிரமாக இருப்பதால் சென்னைக்கு செல்ல விக்னேஸ்வரனுக்கு இ -பாஸ் கிடைக்கவில்லை.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி, தனது முதல் திருமண நாளன்று தனது மனைவியுடன் இருக்க முடியவில்லையே என்று ஏற்கனவே வருத்தத்தில் இருந்த விக்னேஸ்வரனுக்கு தற்போது பிரசவத்தின் போதும் மனைவியுடன் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் கடும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.
இதனால் விரக்தியில் இருந்த விக்னேஸ்வரன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே அவரது மனைவிக்கு பிரசவ வலி வரவே, உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, விவரத்தை கூற விக்னேஸ்வரனுக்கு போன் செய்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாக அவர் போனை எடுக்காததால், அருகில் இருக்கும் அவரது நண்பர்களுக்கு போன் செய்து விவரத்தை கூற, அவர்கள் விக்னேஸ்வரனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற அவர்கள், விக்னேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.