மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மனைவி வர மறுப்பு.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த கணவன்! சரமாறியாக 3 பேருக்கு நேர்ந்த கொடூரம்..!!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்த மனைவியை கத்தியால் தாக்கியதுடன், தடுக்க வந்த மாமனார் மற்றும் மாமியாரையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம் இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்த ரேகா, கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அவரைப் பிரிந்து, தனது பெற்றோர் ரவி மற்றும் சாந்தியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரேகாவின் வீட்டுக்குச் சென்ற ராஜேஷ், தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரேகா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேகாவை சரமாரியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட பெயிண்டர்.. விசாரணையில் வெளியான பகீர் உண்மை.. கள்ளக்காதல் மோகம் உயிர்பறித்த சோகம்.!
மகளை காப்பாற்ற ஓடி வந்த ரவி மற்றும் சாந்தியையும் ராஜேஷ் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதுமை தந்த வலி.. பாரமாக நினைத்த மகன்.. ஓடும் ரயில் முன் தள்ளி... திடுக்கிடவைக்கும் சம்பவம்.!