முதுமை தந்த வலி.. பாரமாக நினைத்த மகன்.. ஓடும் ரயில் முன் தள்ளி... திடுக்கிடவைக்கும் சம்பவம்.! 



Son Allegedly Pushes 75-Year-Old Mother in Front of Moving Train, Arrested in Tamil Nadu

தன்னை ஈன்றெடுத்து வளர்த்த தாயின் முதுமையில் மகன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மூதாட்டி: 

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு, மணவூர், காபுல் கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் பத்மாவதி (வயது 75). இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். பத்மாவதியின் கணவர் சேஷாத்திரி ரயில்வேலியில் பணியாற்றி ஓய்வுபெத்தவர் என்பதால், மூதாட்டிக்கு குடும்ப ஓய்வு ஊதியமாக ரூ. 45 ஆயிரம் மாதம் வழங்கப்படுகிறது. சேஷாத்திரியும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். 

இதையும் படிங்க: கல்லூரி மாணவி, தாய் மீது 20 பேர் கும்பல் தாக்குதல்.. மணல் கொள்ளை துப்பு கொடுத்ததால் வெறிச்செயல்.! தமிழகமே ஷாக்.! 

இளைய மகன்: 

மூதாட்டியின் ஓய்வூதிய பணத்தை கொண்டு, அவரின் இளைய மகன் பார்த்தசாரதி (வயது 43) தாயை கவனித்து வந்துள்ளார். பார்த்தசாரதியின் மனைவி, 2 மகள்கள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், உடல்நலம் குன்றிய தாயை சாரதி கவனித்து இருக்கிறார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு மூதாட்டி மணவூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Crime news

விசாரணை: 

இதுதொடர்பாக அரக்கோணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், மூதாட்டி இறந்து கிடந்த இடத்தில் வீல் சேரும் நொறுங்கி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் தாயை வீல் சேரில் அமரவைத்தபடி அழைத்துச்சென்று, அதிவிரைவு ரயில்முன் சேருடன் தள்ளி கொலை செய்தது அம்பலமானது. 

முதுமை: 

இதனையடுத்து, பார்த்தசாரதியை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முதுமையால் அவதிப்பட்ட தாயை கவனிக்க முடியாத காரணத்தால், ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்ட சாரதி சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: சொத்துதான் முக்கியம்.. தந்தை லாரி ஏற்றிக்கொலை.. இப்படியும் ஒரு மகனா? காஞ்சிபுரத்தில் பகீர்.!