கல்லூரி மாணவி, தாய் மீது 20 பேர் கும்பல் தாக்குதல்.. மணல் கொள்ளை துப்பு கொடுத்ததால் வெறிச்செயல்.! தமிழகமே ஷாக்.! 



college-student-and-mother-attacked-by-20-member-gang-i

Ulunthurpet News: காவல்துறைக்கு தகவல் சொன்ன பெண்ணை 20 பேர் கும்பல் தாக்கிவிட்டு சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும், அதிகாரம், செல்வ வளம் கொழுத்த நபர்களுக்கே என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

வைப்பாளையம்: 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, வைப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் நேற்று வீட்டில் இல்லாத நிலையில், அங்கு சென்ற 15 - 20 பேர் கும்பல், ஆற்று மணல்திருட்டு குறித்து ரமேஷ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக தகராறு செய்துள்ளது.  

இதையும் படிங்க: என் கூட வாழமாட்டியா? கள்ளக்காதலனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!  

Crime news

தாக்குதல்: 

அச்சமயம், வீட்டில் இருந்த அவரின் மகளான கல்லூரி மாணவி அக்சயா (வயது 18) என்பவரை சரமாரியாக தாக்கிய கும்பல், இதனை தடுக்க வந்த அக்சயாவின் சித்தி பாக்கியலட்சுமி (வயது 38) என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளது. 

Crime news

படுகாயம்: 

இதனால் படுகாயம் அடைந்த இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து திருநாவலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத செயல் குறித்து தகவல் தெரிவித்த நபரின் வீடு முகவரி உட்பட அனைத்தையும் காட்டிக்கொடுத்த நபர் யார்? இந்த கும்பலை அனுப்பியது யார்? என அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த இளைஞர் கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்.!