என் கூட வாழமாட்டியா? கள்ளக்காதலனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!  



Woman Who Left Lover for Children’s Future Burned Alive in Thoothukudi; Man Arrested

குழந்தைகளின் எதிர்காலம் கருதி கள்ளக்காதலனை பிரிந்த பெண், தீவைத்து எரித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.  

தொழிலாளி குடும்பம்: 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம், சாலநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ். இவர் தொழிலாளி ஆவார். சுந்தரின் மனைவி குருவலட்சுமி (வயது 42). தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். இதனிடையே, லட்சுமிக்கு அதே பகுதியில் வசித்து வந்த சின்ன கெங்குராஜ் (வயது 47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த இளைஞர் கொடூர கொலை.. துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்.! 

கள்ளக்காதல்: 

இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த ராஜின் மனைவி கணவரை பிரிந்து சென்றார். பின் லட்சுமி தனது கணவரை பிரிந்து கள்ளகாதலருடன் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இருவரும் வெளியூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

Crime news

கண்டிப்பு: 

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், உறவினர்கள் குருவலட்சுமியை கண்டித்து இருக்கின்றனர். மேலும், குழந்தைகளின் எதிர்காலம் கருதி கணவருடன் குடித்தனம் நடத்த வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சில மாதங்களுக்கு முன்னதாக கள்ளக்காதலனை பிரிந்த லட்சுமி, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். 

ஆத்திரம்: 

இந்த விஷயத்தால் ஆத்திரமடைந்த ராஜ், லட்சுமியிடம் தன்னுடன் குடித்தனம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தகராறு நடந்து வந்த நிலையில், கடந்த 10 ம் தேதி லட்சுமியின் வீட்டில் ஆட்கள் இல்லை. அங்கு சென்ற ராஜ் லட்சுமியை அழைக்க, அவர் மறுத்த காரணத்தால் அடித்து உதைத்து இருக்கிறார். 

Crime news

கொலை: 

மேலும், லட்சுமியின் உடலில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றுள்ளார். அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ராஜ் கைது செய்யப்பட்டார். இதனிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குருவலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையும் படிங்க: தமிழகத்தை அதிரவைத்த காஞ்சிபுரம் இரட்டைப்படுகொலை.. அரங்கேறிய கொடூரம்..!