கலிகாலம்.... அரசு பள்ளி விடுதியில் இரவில் மாணவிகள் குடித்த மதுபானம்! தூய்மை பணிப்பெண் கார் ட்ரைவருடன் அனுப்பிவிட்டு... தனியான இடத்தில் சில்மிஷம்! இறுதியில் அடுக்கடுக்காக வெளிவந்த அதிர்ச்சி உண்மை...!!!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்த 2 பள்ளி மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதி தூய்மை பணியாளர் ராதிகா மற்றும் அவரது நண்பரான கார் ஓட்டுநர் ரகுபதி ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவிகளுடன் ஏற்பட்ட அறிமுகம்
வாழப்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு தூய்மைப் பணியாளராக ராதிகா வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரகுபதியுடன் அவருக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை ராதிகாவின் கைப்பேசியில் ரகுபதி பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த 2 மாணவிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதன்பிறகு மாணவிகள் ரகுபதியின் கைப்பேசியில் அடிக்கடி பேசியதாக தெரிகிறது. கடந்த 8-ம் தேதி இரவு ராதிகாவுக்காக பீர் பாட்டில் மற்றும் சில்லி சிக்கன் வாங்கி வந்த ரகுபதி, அவற்றை அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் ராதிகா, 2 மாணவிகளுடன் சேர்ந்து நள்ளிரவில் மதுபானம் அருந்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றதாக புகார்
அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட ரகுபதி, தனது மோட்டார் சைக்கிளில் இரு மாணவிகளையும் தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராதிகா தொலைபேசியில் தொடர்புகொண்டு மாணவிகளை மீண்டும் விடுதி அருகே அழைத்து வருமாறு கூறியதாக தெரிகிறது. அதன்படி ரகுபதி மாணவிகளை விடுதி அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
பெற்றோரிடம் தெரிவித்த மாணவிகள்; 2 பேர் கைது
நடந்தவற்றால் அச்சமடைந்த மாணவிகள் உடனடியாக யாரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. சுதந்திர தின விடுமுறையையொட்டி கடந்த 15-ம் தேதி சொந்த ஊர்களுக்குச் சென்றபோது, பெற்றோரிடம் நடந்தவற்றை அழுதபடி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கு இனி செல்ல விருப்பமில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ரகுபதியையும் நள்ளிரவில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதனிடையே, வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா, மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பரபரப்பு! பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யனும்! இல்லையேல் தற்கொலை தான்.... அய்யாக்கண்ணுவின் அதிர்ச்சி கோரிக்கை!!!