தமிழகத்தை அதிரவைத்த காஞ்சிபுரம் இரட்டைப்படுகொலை.. அரங்கேறிய கொடூரம்..!
கஞ்சா போதையால் நடந்த தகராறு காரணமாக இரண்டு உயிர்கள் பறிபோய் குடும்பத்தினர் கண்ணீருடன் இருக்கின்றனர்.
கோயில் திருவிழா:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படுநெல்லி கிராமத்தில், மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நேற்று முன்தினம் காலை நேரத்தில் திருவிழா தொடங்கியது. கிராம தேவதையான பொன்னியம்மன் கோயிலுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும் தொடங்கி இருந்தது.
இதையும் படிங்க: 7 பேரால் 13 வயது சிறுமி பலாத்காரம்.. சகோதரர், காதலன் என பீர் குடிக்கவைத்து நேர்ந்த கொடுமை.. சேலத்தில் பேரதிர்ச்சி.!
வாக்குவாதம்:
அச்சமயம், இருதரப்பு இடையே திடீர் வாக்குவாதம் உண்டாகிய நிலையில், ஊர் பெரியவர்கள் தலையிட்டு சரி செய்தனர். பின் அனைவரும் கலைந்து சென்ற நிலையில், பொன்னியம்மன் கோயில் நிகழ்ச்சி முடிந்து, மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர். அங்கு சிறப்பு நிகழ்ச்சி முடிந்து, இரவில் சாமி வீதிஉலா நடைபெற்றது. ஊர்மக்கள் 500 பேர் இருந்தனர்.
கஞ்சா போதை:
அப்போது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சாமிக்கு அலங்காரம் செய்த இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை ஊர் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்ய முற்பட்டனர். அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதற்காக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் இளைஞர்கள் அங்கிருந்து சென்று, அதிக போதையில் வருகை தந்துள்ளனர்.
அடிதடி:
இதனால் அங்கு நிலவிய வாக்குவாதம் அடிதடியாக மாறியது. மேலும், தாங்கள் மறைத்து எடுத்து வந்த கத்தியை எடுத்து சந்திரசேகரன் (வயது 26), விக்கி (வயது 27) ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இவர்கள் சாமிக்கு அலங்காரம் செய்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். அவர்களின் முகமும் சிதைக்கப்பட்டது.
சிதறியோடிய மக்கள்:
இரட்டைக்கொலை காரணமாக பதறிப்போன மக்கள் சிதறி ஓடி இருக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேரில் வந்து கதறியழுதனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடலை மீட்க முயன்றபோது, காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
கைது:
குற்றவாளிகளை பிடிக்க அதிகாரிகள் தனிப்படை அமைத்த நிலையில், இருவர் கொலையில் தொடர்புடைய பகவதி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இதையும் படிங்க: குடும்ப பெண்கள், மாணவிகள் டார்கெட்.. மோசடி பணத்தில் கோடீஸ்வரன்.. யார் இந்த கேடி?