7 பேரால் 13 வயது சிறுமி பலாத்காரம்.. சகோதரர், காதலன் என பீர் குடிக்கவைத்து நேர்ந்த கொடுமை.. சேலத்தில் பேரதிர்ச்சி.! 



in Salem a 13 year Old Girl Sexually Abused by Brother and Boy friend 6 others

சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

13 வயது சிறுமி: 

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, பத்தாம் வகுப்பு பயின்று வரும் 17 வயது சிறுமி உட்பட 3 பேர் பழக்கமாகி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: குடும்ப பெண்கள், மாணவிகள் டார்கெட்.. மோசடி பணத்தில் கோடீஸ்வரன்.. யார் இந்த கேடி? 

மதுப்பழக்கம்: 

இவர்கள் அனைவரும் ஒன்றாக சுற்றிவந்த நிலையில், மதுகுடிக்கும் பழக்கமும் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ளது. போதையில் 13 வயது சிறுமி மற்றும் 17 வயது சிறுமி இருவரும் பாலியல் ரீதியாகவும் நெருக்கமாகி இருக்கின்றனர். 13 வயது சிறுமியின் நடவடிக்கையை கண்டு வேதனையடைந்த தாய், மகளுக்கு போதைப்பழக்கம் இருப்பதாக சைல்டு லைனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். 

Crime news

விசாரணை: 

பின் இதுதொடர்பாக சிறுமியை மீட்டு விசாரித்தபோது, சிறுமி 7 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில், 17 வயது சிறுமியின் சகோதரர், 13 வயது சிறுமிக்கு பீர் வாங்கிக்கொடுத்து அத்துமீறி இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. 

7 பேர்: 

பின் சிறுமியின் காதலன், நண்பர்கள் என 7 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த உண்மையைத்தொடர்ந்து சிறுமியின் அண்ணன், சிறார்கள் என 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பீர், கூலிப் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, பின் அதற்கு சிறுமி அடிமையாகி இருக்கிறார். போதைக்கு அடிமையான சிறுமியை சிறார்கள் பாலியல் ரீதியாகவும் பலவந்தப்படுத்தி இருந்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: மதுபோதையில் நடந்த தகராறு.. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்.!