தலைமை ஆசிரியை கொடூர கொலை.. மாணவர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்.. காரணம் என்ன?
தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை ஆசிரியை:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டம், கண்டமலே பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில், தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ரூபா ரெட்டி. இவர் கடந்த 11 ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தார். இவரை தாக்கி கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன. மேலும், அவரிடம் இருந்த ரூ. 4 லட்சம் பணமும் திருடப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: வெப்சீரிஸ் பார்த்து கொள்ளை, கொலை.. தாய் - மகன் செய்யிற வேலையா இது? தெலுங்கானாவில் திடுக்கிடவைக்கும் உண்மை.!
விசாரணை:
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் விரைந்து நிகழ்விடத்தை ஆய்வு செய்தனர். மேலும், கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஆசிரியையின் கணவர் உட்பட 50 பேரிடம் வாக்குமூலங்களும் சேகரிக்கப்பட்டன.
மாணவர்கள்:
விசாரணைக்குப்பின் ஒருசில மாணவர்கள் மீது சந்தேகம் எழவே, பள்ளியில் படித்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆசிரியரை கொலை செய்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 22 வயது இளைஞரின் செல்போனில் 600 ஆ., படம்.. சிறுவர்கள், இளைஞர்களை மிரட்டி வன்கொடுமை.. திடுக் சம்பவம்.!