வெப்சீரிஸ் பார்த்து கொள்ளை, கொலை.. தாய் - மகன் செய்யிற வேலையா இது? தெலுங்கானாவில் திடுக்கிடவைக்கும் உண்மை.! 



Mother-Son Duo Arrested for Murder and Robbery in Telangana After Watching Crime Web Series

திரைப்பட பாணியில் நடந்த கொடூர சம்பவம் மக்களை பதறவைத்துள்ளது. 

பெண் சடலம்: 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபெட்டை நகரம், ராமாக்கப்பேட்டை வயல்பகுதியில், கடந்த 8ம் தேதி அடையலாம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர் பூம்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த விஜயா (வயது 45) என்பது தெரியவந்த நிலையில், அவரை கொலை செய்தது யார் என்ற விசாரணை நடந்தது. 

இதையும் படிங்க: 22 வயது இளைஞரின் செல்போனில் 600 ஆ., படம்.. சிறுவர்கள், இளைஞர்களை மிரட்டி வன்கொடுமை.. திடுக் சம்பவம்.! 

அடையாளம் தெரிந்தது: 

விசாரணைக்குப்பின், பூம்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த துயப்பா என்பவரின் மனைவி சாக்களி ரஜிதா (வயது 38), அவரின் மைனர் மகன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இவர்கள் இருவரும் பெண்களை நோட்டமிட்டு பணம், நகை, சொத்துக்கள் குறித்து விபரம் அறிந்து, அதனை கொள்ளையடித்து தப்பிச்செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

Crime news

கொலை எப்படி? 

பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், சம்பவத்தன்று ரஜிதா மற்றும் அவரின் மகன் மளிகைக்கடையில் வைத்து பேசிக்கொண்டு இருந்தபோது, விஜயாவை தாக்கி கொலை செய்துள்ளனர். பின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று எரித்து இருக்கின்றனர். இதே போல கடந்த மே மாதம் 28 ம் தேதி நடந்த கொலை சம்பவத்திலும் தாய் - மகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அன்னபூர்ணா என்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறாக குற்றச்செயல்கள் பல அரங்கேற்றப்பட்டுள்ளன. இவர்கள் குற்ற பின்னணி கொண்ட வெப்சீரிஸ்களை அதிகம் பார்த்து இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. 
 

இதையும் படிங்க: சைக்கோவை காதலித்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கை-கால்கள் கட்டி எரித்துக்கொலை.!