மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மருத்துவ படிப்புக்காக ஆசோயோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை! கண்ணீருடன் பேசும் மகனை பார்த்து கதறித் துடிக்கும் பெற்றோர்...! நெஞ்சை உலுக்கும் சோகம்...!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் அபினேஷ் குமார். ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் அங்கு சென்ற அவர், தன்னை கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துள்ளதாகக் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, மகனை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு தமிழக அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப் படிப்பு ஆசையை நம்ப வைத்த நபர்
கூலித் தொழிலாளர்களான சேதுராஜ் - லலிதா தம்பதியரின் மகனான அபினேஷ் குமார் பட்டப்படிப்பு முடித்துள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வந்த அவருக்கு, 'பகிரகன்' என்ற பெயரில் அறிமுகமான நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தான் கல்வி முகவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர், அறிவியல் பாடம் படித்திருந்தால் ரஷ்யாவில் எளிதாக மருத்துவப் படிப்பில் சேரலாம் எனக் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: எங்கிருந்துடா வந்திங்க... திடீரென சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்! அதிர்ச்சியில் உறைந்த நபர்.... வைரல் வீடியோ!!!
மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அபினேஷ் குமார் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட பெற்றோர், பொருளாதார சிரமங்களுக்கு இடையிலும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதையடுத்து விசா பெற்று, கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அபினேஷ் குமார் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு துண்டிக்கப்பட்ட தொடர்பு
ரஷ்யா சென்ற பிறகு சுமார் மூன்று மாதங்கள் வரை அபினேஷ் குமார் தனது பெற்றோருடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஆனால், அதன்பின் திடீரென அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலமுறை முயன்றும் மகனை தொடர்புகொள்ள முடியாததால் பெற்றோர் கவலையடைந்தனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கண்ணீருடன் பேசும் அபினேஷ் குமார், தான் ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மருத்துவப் படிப்புக்காக ரஷ்யா சென்ற மகன் எவ்வாறு ராணுவத்தில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்து பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மகனை மீட்க பெற்றோர் கோரிக்கை
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், தங்கள் மகனின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர். கல்வி என்ற நம்பிக்கையில் ரஷ்யாவுக்கு அனுப்பிய நிலையில், தற்போது அபினேஷ் குமார் மீட்பு தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.