
H Raja talk about Actor surya
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாபங்கேற்று பேசினார். அப்போது புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா,மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது எனவும், முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், அனைவரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மேலும், திமுக எம்பி கனிமொழி இந்தி படிக்கும் போது, மக்கள் இந்தி படிக்கக் கூடாதா? இந்தி விருப்பப் பாடம் தான் என்று அரசு தெளிவாக தெரிவித்துள்ள நிலையில் திணிப்பு என கூறுவது எப்படி சாத்தியமாகும் என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement