குவாட்டர் 300 ரூபாய் கொடுத்து ப்ளாக்ல மது வாங்கின குடிமகன்கள்.! பாட்டிலை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!

குவாட்டர் 300 ரூபாய் கொடுத்து ப்ளாக்ல மது வாங்கின குடிமகன்கள்.! பாட்டிலை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!


Ginger coffee sell in the name of alcohol for rs 300

சரக்கு பாட்டிலில் சுக்கு காபியை ஊற்றி, குவாட்டர் 300 ரூபாய் என விற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அணைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளநிலையில், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். ஒருசில இடங்களில் தற்கொலைகளும் நடந்துவருகிறது.

இந்நிலையில், எங்காவது மது பாட்டில் கிடைக்குமா என குடிமகன்கள் திண்டாடிவரும் நிலையில், குறிப்பிட்ட இடத்தில் மது கிடைக்கிறது என தகவல் வெளியாக, விற்கும் இடத்தில் சற்று நேரத்தில் கூட்டம் கூடியுள்ளது. பாட்டில் 300 ரூபாய், போலீஸ் வருது வாங்கிட்டு வேகமாக இடத்தை காலி பண்ணுங்க என இரண்டு பேர் கூவி கூவி விற்பனை செய்துள்ளன்னர்.

corono

எப்படியோ நமக்கு சரக்கு கிடைத்தால் சரி என நினைத்து 300 ரூபாயை நீட்டி பாட்டில் ஒன்றை வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டு குடிமகன்கள் அங்கிருத்து நடையை கட்டியுள்ளனர். இதனை அடுத்து, புத்தர் மறைவில் அமர்ந்து சரக்கு பாட்டிலை ஆசையாக திறந்த அவர்களுக்கு பாட்டிலில் இருந்து சுக்கு காபி வாடை வந்துள்ளது.

சரி ஏதோ புது சரக்கு போல என நினைத்து குடித்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, உள்ளே இருந்தது புது சரக்கு இல்லை. 5 ரூபாய்க்கு விற்கப்படும் சுக்கு காப்பிதான். இப்படி போய் 300 ரூபாயை ஏமாந்து விட்டோமே என குடிமகன்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.