தமிழகம் விளையாட்டு

ஜல்லிக்கட்டில் நடக்கும் பாகுபாடுகள்! உயிரையே விட்டுவிடுவோமா என நினைக்கும் ஏழை விவசாயிகள்!

Summary:

Farmers not satisfied in jallikattu

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தென் மாவட்டங்களில் அதிவிமர்சியாக நடைபெற்று வருகிறது. மாபெரும் போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டின் பெருமை உலகம் முழுவதும் அணைத்து மக்களாலும் ஈர்கப்பட்டது. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பிறகு தற்போது பல விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கின்றனர்.

பல வருடங்களாக தென்மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால், விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்த விளைச்சல்களின் விலை குறைவாலும் விவசாயத்தை தவிர்த்து வந்தனர் பல விவசாயிகள். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பிறகு ஜல்லிக்கட்டு காளை வளர்பதற்காகவும், காளைகளுக்கு உணவுக்காக வைக்கோல் வேண்டும் என்பதற்காக தற்போது பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர்.

அப்படி கஷ்ட்டப்பட்டு வளர்த்த விவசாயிகளின் காளைகளுக்கு ஜல்லிக்கட்டிலும் மதிப்பு கிடைப்பதில்லை. எல்லா ஜல்லிக்கட்டிலும் பல பாகுபாடுகள் நடக்கின்றது. ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு வழங்கப்படும் டோக்கனில் இருந்து, பரிசு வரை விவசாயிகள் பின்தள்ளப்படுகின்றனர். 

ஜல்லிக்கட்டில் வர்ணனையாளர்களின் பாகுபாடு என்னவென்றால், செல்வாக்கு உள்ளவர் மாடாக இருந்தால், அந்த காளை பிடிபட்டாலும் வெற்றி என அறிவிப்பார்கள். மேலும், அந்த காளை எவ்வளவு நேரம் வேணுமென்றாலும் களத்தில் நின்னு விளையாடலாம். அதுமட்டுமின்றி மாடு பெயரை அறிவித்த உடனே வீரர்களை ஓடிப்போ... ஓடிப்போனு கத்துவார்கள்.

அந்த மாட்டை பார்த்து ஓடி போறதுக்காகவா வாடிய சுற்றி அவ்வளவு வீரர்கள் நின்றுகொண்டு இருக்கிறார்கள்?  அதுமட்டுமின்றி செல்வாக்கு உள்ளவர்களின் காளை உள்ளே வந்ததும் 20 பேரு  வாடிய விட்டு வெளியே வந்து, துண்டு சுற்றினாலும் எதுவும் கேட்கமாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் மாடு வெளியே வந்தா ஒருத்தர் மாட்டு கூட வந்து துண்டு சுற்றினாலும் மாட்டுக்காரன் வெளியே போடா னு கத்துவார்கள். ஏழை விவசாயிகளின் மாடு அருமையாக விளையாடினாலும் உடனே கயிறு போடுங்கப்பா என கூறுவார்கள். 

அதுமட்டுமல்லாமல் பரிசு போடுவதிலும் பாகுபாடு பணம் படைத்தவனுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளது. அப்படி செல்வாக்கு உள்ளவர்களின் காளைக்கு விலை உயர்ந்த பரிசு போடுவார்கள். மற்றவர்களுக்கு அண்டா, சேர் இப்படி பரிசு போடுவார்கள்.

விவசாயிகள் கஷ்டப்பட்டு வளர்த்து பல போராட்டங்களுக்கு பிறகு டோக்கன் வாங்கி வரிசையில் அடிபட்டு மிதிபட்டு வந்து காளையை அவிழ்த்தால், அசால்டா மாடு பிடி படவில்லை என்றாலும் பிடி மாடுன்னு அறிவிக்கும்போது அந்த மாட்டுக்காரன் மன நிலைமை செத்துடலாமா என்று தோன்றும் என கூறுகின்றனர் ஏழை விவசாயிகள். ஆனால் செல்வாக்கு உள்ளவர்களின் மாடாக இருந்து, மாடுபிடி வீரன் உயிரை பணயம் வைத்து காளையை பிடித்தால்,  அசால்டாக மைக்கை பிடிச்சுக்கிட்டு மாடு வெற்றினு அறிவிப்பார்கள். எனவே ஜல்லிக்கட்டு நடத்தும் விழா கமிட்டியாளர்கள் இதனை கவனத்தில் கொண்டு, எந்த பாகுபாடின்றி ஜல்லிக்கட்டை நடத்தி தமிழர்களின் பெருமை சேர்ப்போம் என கூறுகின்றனர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள். 


Advertisement