அரசியல் தமிழகம்

மிஸ்டர் உதயநிதி.. எனது அனுபவம் தான் உங்களின் வயது..! கொந்தளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.!

Summary:

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்துவருகிறார்.

இந்தநிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஏழை எளியவர்கள் முன்னேறுவதற்கு சிறப்பான ஆட்சியை வழங்குகிறது அதிமுக அரசு. நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்பவர்கள் விவசாயிகள். அரசு அதிகாரியைத் தேடி மக்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை 1100 என்ற என்னை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகளாக மக்களை கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். அதிமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என பச்சையாக பொய் சொல்லி வருகிறார். மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றிவருகிறார். என்னுடைய அனுபவத்தை வயதாக கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின் அதிமுகவை விமர்சித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.


Advertisement