தமிழகம்

கொரோனா எதிரொலி: இந்த மாதம் மின்கட்டணம் எப்படி செலுத்துவது.! தமிழக மின்வாரிய துறையின் அறிவிப்பு!

Summary:

Eb bill

இந்தியாவில் கொரோன வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் அனைத்து பள்ளி,கல்லூரிகள், திரையரங்கு மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நோயால் இதுவரை இந்தியாவில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மின்கட்டணத்தை எப்படி செலுத்துவது குறித்த அறிவிப்பை தமிழக மின்வாரிய துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுதல் காரணமாக வீடுகளுக்கு சென்று ரீடிங் எடுக்க முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் தங்களது வீட்டின் கரண்டு பில்லை நேரடியாக செலுத்துவதை தவிர்த்து இணைய வழியாக கடந்த மாத கட்டணத்தையே மார்ச் மாதத்திற்கு செலுத்துமாறு அதிரடி அறிவிப்பை தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகு பின்வரும் மாதங்களில் மின்கட்டணம் கணக்கிட்டு சரிசெய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. 


Advertisement