தமிழகம் மருத்துவம் Covid-19

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா! நேற்று ஒருநாள் மட்டும் பலியானவர்கள் எத்தனை பேர் தெரியுமா.?

Summary:

corona increased in tamilnadu

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் 1,149 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் மொத்தம் 22,136 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக நேற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 17 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 528 பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17,527 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement