தமிழகம் Covid-19

இன்றுமட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு இத்தனை பேர் பாதிப்பா..? மொத்த பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

Corona increased in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,516 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,891 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.80,063 லட்சமாக அதிகரித்துள்ளது.


Advertisement