தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா.! வெளியானது மாவட்ட வாரியான பட்டியல்..!

Corona affected for total tamilnadu 110


corona-affected-for-total-tamilnadu-110

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்நோயானது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. 

இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்நோயால் நேற்று வரை தமிழகத்தில் மட்டும் 124 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது திடீரென இன்று ஒரே நாளில் 110 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

tamilnadu

அந்த 110 பேரும் எந்தெந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோயம்புத்தூரில் 28, தேனியில் 20,திண்டுக்கல் 17,மதுரை 9, திருப்பத்தூர் 7, செங்கல்பட்டு 7, திருநெல்வேலி 6, சிவகங்கை 5, காஞ்சிபுரம் 2, திருவாரூர் 2, ஈரோடு 2, தூத்துக்குடி 2, கரூர் 1, திருவண்ணாமலை 1, சென்னை 1 என மொத்தம் தமிழ் நாட்டில் மட்டும் ஒரே நாளில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.