காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
4 மாவட்டங்களுக்கு கனமழை.. வடதமிழகம் உட்பட பல மாவட்டங்களில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
மேற்குத்திசை காற்றின் காரணமாக வடதமிழகம் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, "மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக 15 ஆம் தேதியான இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மலை முதல் மிதமான மழை பெய்யலாம்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வரும் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம். இலட்சத்தீவு, கேரள - கர்நாடக கடலோர பகுதி, அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்பதால், இன்று அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.