5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!Chennai RMC Announce Rain Alert for Aug 26 Report 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாடு இன்று முதல் 1ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. 

திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். 

chennai

சென்னை & புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.