அத்திவரதரை தரிசிக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்! மகன் மற்றும் கணவரை பறிகொடுத்து கதறி துடிக்கும் இளம்பெண்!!

அத்திவரதரை தரிசிக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்! மகன் மற்றும் கணவரை பறிகொடுத்து கதறி துடிக்கும் இளம்பெண்!!


car-accident-while-going-to-atthivarathar-dharisanam

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சுப்புராஜ். இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் பணியில் இருந்தார். இவரது மனைவி கிருத்திகா, இவர்களுக்கு விவன் என்ற 3 வயது குழந்தை இருந்தது .

இவர்கள் அத்திவரதரை தரிசிக்க காரில் புறப்பட்டுள்ளனர். மேலும் அப்பொழுது அவர்களுடன் சுப்புராஜின் நண்பரான மகேந்திரன், அவரது மனைவி அனிதா, 2 வயது மகன் கிருஷ்ண நாயக் உடன் சென்றுள்ளனர். அப்பொழுது காரை சுப்புராஜ் மனைவி கிருத்திகா ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கார் தர்மபுரி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

car accident

மேலும் சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.  இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை விவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 ஆனால் அங்கு சுப்புராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த கிருத்திகா மற்றும் மகேந்திரன் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்திவரதரை தரிசனம் செய்ய சென்றபோது மகன் மற்றும் கணவரை இழந்த கிருத்திகா கதறி அழுதுள்ளார்.  இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.