தமிழகம்

கொரோனாவால் கடனை சமாளிக்க முடியாத நபர்! தொழில் நடத்தும் இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை!

Summary:

auto driver suicide

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகள் திணறி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பலர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்தநிலையில் சுப்பிரமணி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை நிறுத்திவிட்டு, ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடை முன்பு சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோ டிரைவர் சுப்பிரமணிக்கு கடன் தொல்லை அதிகம் இருந்ததும், தற்போது போதுமான வருமானம் இல்லாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்


Advertisement