வாடகையா கேக்குற வாடகை?!,, இந்தா வாங்கிக்க!: குக்கர் மூடியால் மூதாட்டியின் மண்டையை பிளந்த கொடூரன்..!A man hit an old woman with a cooker lid for asking for house rent

சென்னை, திருவான்மியூர் அருகேயுள்ள மங்களேரி பகுதியை சேர்ந்தவர் கமலாபாய் (68). ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் திலகராஜ் (37). இவர் மங்களேரி பகுதியில் உள்ள கமலாபாய் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில், திலகராஜ் வீட்டு வாடகை பாக்கியை ஒழுங்காக கொடுக்கவில்லை என்று கூறப்ப்டுகிறது. இதனால் அவரை வீட்டு உரிமையாளரான கமலாபாய் கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திலகராஜ், கமலாபாயின் கையை கடித்துள்ளார்.

இதன் பிறகும், ஆத்திரம் அடங்காத அவர் வீட்டிற்குள் சென்று குக்கர் மூடியை எடுத்து வந்து கமலாபாயின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதன் காரணமாக தலையில் பலத்த காயம் அடைந்த கமலாபாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது மகள் இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த திலகராஜை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் திருவான்மியூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.