அச்சோ... 6 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை... தந்தை பரபரப்பு புகார்.!



6th-standard-student-commits-suicide-father-demands-pol

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இது தொடர்பாக மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை கொடுத்த புகாரைத் தொடர்ந்து காடும் பட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள  மன்னாடி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். திருமணமான இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களில் இளைய மகன் பெயர் சண்முகவேல் அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.

tamilnadu

இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முக வேலை தேடிய போது  அவன் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து அவனை சோழவந்தான்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை அருண்குமார் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காடும் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்ற காவல் துறையினர்  இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.