தமிழகம்

2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..

Summary:

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர்கள் செபாஸ்டின் - எஸ்தர் தம்பதியினர். இவர்களுக்கு ஆரோன் என்ற இரண்டு வயது மகன் இருந்தார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த படிக்கட்டில் அமர்ந்தவாறு குழந்தை ஆரோன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது படிக்கட்டின் அருகே இருந்த தண்ணீர் நிரப்பிய வாளியில் இருந்து சிறிய பொம்மை கோப்பையில் தண்ணீரை இரைத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளான் சிறுவன். அப்போது சிறுவன் நிலைதடுமாறி தண்ணீர் வாளிக்குள் விழுந்துள்ளான். இதனை அங்கிருந்தவர்கள் யாரும் பார்க்காதநிலையில், சிறிதுநேரம் கழித்து வீட்டின் பின்புறமாக சென்று பார்த்தபோது சிறுவன் தண்ணீர் வாளியில் மூழ்கியவாறு இறந்து கிடப்பதை பார்த்து கதறியுள்ளனர்.

இரண்டு வயது சிறுவன் தண்ணீர் வாளியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement