விளையாட்டு

"உலகின் மிகவும் மோசமான ஆட்டக்காரர்" விராட் கோலிக்கு எதிராக படையெடுக்கும் பிரபலங்கள்

Summary:

vk is worlds worst behaved cricketer

"விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல; நடத்தையில் மிகவும் மோசமான வீரரும் கூட" என கோலியை பற்றி பிரபல நடிகர் விராட் கோலியை பற்றி விமர்சித்துள்ளார்.

விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றார். யாரும் எட்ட முடியாது என்று எண்ணிய சச்சினின் சாதனைகளை இவர் நிச்சயம் முறியடிப்பார் என அனைவரும் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வரும் விராட் கோலி மைதானத்திற்குள் எதிரணியினர் இடம் நடந்து கொள்ளும் விதம் தான் மிகவும் மோசமாக உள்ளது. பொதுவாக அதிகமான திறமை கொண்டவர்கள் அமைதியாக இருப்பார்கள் என கேள்விப்பட்டிருப்போம். இதற்கு சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறந்த உதாரணம். ஆனால் விராட் கோலி அதற்கு எதிர்மாறாக இருந்து வருகிறார். அவர் சில சமயங்களில் மைதானத்தில் செய்யும் செய்கைகள் எதிரணியினரை மிகவும் புண்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. இதனால் அவர் பலமுறை எச்சரிக்கை ஆளாகின்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் கூட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினிடம், விராட் கோலி வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதனால் நடுவர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

Naseeruddin Shah க்கான பட முடிவு

பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, விராட் கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "விராட் கோலி உலகின் மிகச்சிறந்த  கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. உலகின் மோசமான நடத்தை கொண்ட வீரர் கூட. அவரது திறமையான விளையாட்டு அவரது அகந்தை மற்றும் கெட்ட நடத்தைகளால் மறைந்து விடுகிறது'' என்று பதிவிட்டுள்ளார். மேலும், கோலி ரசிகருக்கு அளித்த பதிலை கிண்டலடிக்கும் வகையில், `எனக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமில்லை' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

michael hussey க்கான பட முடிவு

மேலும் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைகேல் ஹசி "கோலி அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவரது செயல்பாடுகள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் ஆலன் பார்டர், "இதுவரை எந்த கேப்டனும் இவ்வளவு மோசமாக செயல்பட்டு நான் பார்த்ததில்லை" என்று கூறியுள்ளார்.


Advertisement