கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தமிழக வீரர்.! என்ன காரணம்.?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தமிழக வீரர்.! என்ன காரணம்.?


dhinesh-karthik-resigns-as-kkr-team-captain

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.  இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் என மொத்தம் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்து வருகிறது. புதிய வீரர்கள் பல்வேறு அணியில் இணைந்து உள்ளனர். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் போன்ற வீரர்கள் தொடரில் இருந்தே விலகி உள்ளனர். இந்நிலையில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். 

kkr

இதையடுத்து அந்த அணியின் துணை கேப்டன் இயன் மார்கன், கேப்டனாகத் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மார்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் மட்டுமே தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார். 7 போட்டிகளில் ஆடி இருக்கும் கொல்கத்தா 4 போட்டிகளில் வென்றுள்ளது.