இறுதிப்போட்டி சென்னைக்கு வாய்ப்பில்லை! கடும் சோகத்தில் சென்னை ரசிகர்கள்!

இறுதிப்போட்டி சென்னைக்கு வாய்ப்பில்லை! கடும் சோகத்தில் சென்னை ரசிகர்கள்!



csk final match will not in chennai stadium


ஐபிஎல் தொடர் மிக கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றது. இதில் சென்னை அணியின் ஆதிக்கம் மீண்டும் தொடர்கிறது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க வாய்ப்பில்லை என கூறப்படுள்ளது. 

ஐபில் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, இந்த முறையும் சிறப்பாக விளையாடி இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றதில் 4 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

csk

சென்னை அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவதால் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. அப்படி இறுதிப் போட்டிக்கு சென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க வாய்ப்பில்லை என கூறப்படுள்ளது. 

கடந்த ஆண்டு காவேரி பிரச்னையால் சென்னையில் போட்டிகள் நடக்காமல் போனது. சென்னை மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி கடந்த 2012 முதல் தடை விதித்து இருப்பதால் சுமார் 12 ஆயிரம் பேருக்கு மேல் அமரக் கூடிய டிக்கெட்டுகள் வீணாக வாய்ப்புள்ளது என்பதால் இறுதிப்போட்டி சென்னையில் நடத்துவதற்கு பதிலாக மும்பையில் நடத்த பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அமடைந்துள்ளனர்.