விளையாட்டு

வீடியோ: இனிதான் தரமான சம்பவத்தை பார்க்க போறீங்க!! சிக்ஸர்களை பறக்கவிட்டு மாஸ் காட்டும் தோனி..

Summary:

வலைப்பயிற்சியில் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடும் தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிற

வலைப்பயிற்சியில் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடும் தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் T20 சீசன் 14 போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது. வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 10 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதுகிறது.

கடந்த ஐபில் சீசனில் முதல் சுற்றிலையே வெளியேறி கடும் விமர்சனங்களை சந்தித்த சென்னை அணி இந்தமுறை பயங்கர உத்வேகத்துடன் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே சென்னை அணி வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் சில அதிரடி வீரர்களையும் சென்னை அணி இந்தமுறை வாங்கி இருப்பதால் வரும் சீசனில் சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐபில் போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடும் வீடியோ ஒன்றை, பேட்ட படத்தின் தீம் மியூஸிக்குடன் இணைத்து சென்னை அணி தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement