சற்று முன்.. இடைத்தேர்தல் நேரத்தில் இப்படியா? தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி! செம ஷாக்கில் CM விஜய்!!!
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் சேலம் சென்ற அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
அவருடன் தவெக துணை ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்துள்ளனர். தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக நிர்வாகிகளின் இந்த விலகல் அப்பகுதி அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நீங்க என்ன சொல்றது... கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்
குண்டடம் பகுதியில் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து அவருடன் வந்த முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர்.
இடைத்தேர்தல் சூழலில் தவெகவுக்கு பின்னடைவு?
தாராபுரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், களத்தில் செயல்பட்டு வந்த தவெக நிர்வாகிகள் கட்சி மாறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக ஒன்றிய அளவில் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் விலகியிருப்பது, அப்பகுதியில் தவெகவின் அமைப்பு ரீதியான பலத்தை பாதிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் அதிமுக தனது களப்பணியை மேலும் தீவிரப்படுத்துமா என்பதும், தவெக புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துமா என்பதும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் கவனம் பெறும் அம்சங்களாக உள்ளன.
இதையும் படிங்க: அமைச்சரவையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்...! தவெக - வில் அடுத்த விக்கெட் அவுட்? பரபரக்கும் அரசியல் களம்..!!!