அமைச்சரவையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்...! தவெக - வில் அடுத்த விக்கெட் அவுட்? பரபரக்கும் அரசியல் களம்..!!!



madurantakam-dharapuram-bypolls-tvk-election-responsibi

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இரு தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் பொறுப்பாளர்களை தவெக தலைமை அறிவித்துள்ளது. இதில் அமைச்சர் சரத்குமாருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு முறையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு தொகுதிகளிலும் கட்சியின் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... ஸ்டாலினை நேரில் சந்தித்த மல்லை சத்யா! அறிவாலயத்தில் நடந்த அதிரடி ட்விஸ்ட்...!!!

இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி எம்.எல்.ஏ.க்களுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ள சரத்குமாரின் பெயர் இடம்பெறவில்லை. குறிப்பாக அவரது பொறுப்பில் உள்ள மாவட்டத்துக்குட்பட்ட மதுராந்தகம் தொகுதி தேர்தல் பணியிலும் அவர் சேர்க்கப்படாதது தவெக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சரத்குமார் பெயர் இடம்பெறாதது ஏன்?

தேர்தல் பொறுப்பு வழங்கப்படாதது குறித்து கட்சித் தலைமை தரப்பில் வெளிப்படையான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இதன் பின்னணியில் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

ஐ.பி.எல். போட்டியின்போது சேப்பாக்கம் மைதானத்தில் சரத்குமார் ரூபாய் நோட்டில் ஒரு பொருளைத் தூளாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அது தனது குழந்தையின் மருத்துவ மாத்திரை என அவர் விளக்கம் அளித்திருந்தார். எனினும், இந்த விவகாரம் கட்சித் தலைமையின் கவனத்துக்கு சென்றதாகவும், அதன்பிறகே அவருக்கு தேர்தல் பணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் பதவி குறித்தும் பரவும் தகவல்

இதன் தொடர்ச்சியாக, வரவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் சரத்குமாரின் அமைச்சர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனவே, சரத்குமாருக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்படாதது மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான தகவல்கள் குறித்து கட்சித் தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கையே தெளிவை ஏற்படுத்தும்.

இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக இடைத்தேர்தல் பணிகள் தொடர்ந்து வேகமெடுத்து வருகின்றன. வேட்பாளர்களுக்கான பிரசாரம், நிர்வாகிகளின் களப்பணி உள்ளிட்டவை அடுத்தடுத்த நாட்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் எம். எல்.ஏக்கள் மூலம் விஜய் வைக்கப்போகும் செக்! திமுக, அதிமுக நிலை என்ன? வெளியான ரகசிய தகவல்...!!!